U19 உகோ பைனல்.. 80 பந்தில் 175 ரன்.. சூரியவன்சி பிரம்மாண்ட சாதனைகள்.. 411 ரன் எடுத்து இந்திய அணி சாதனை

இன்று U19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வைபவ் சூரியவன்சியின் மிரட்டல் பேட்டிங் காரணமாக இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஆரோன் ஜார்ஜ் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறி ஏமாற்றம் தந்தார். மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்னொரு முனையில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூரியவன்சி 55 பந்துகளில் இந்த தொடரில் தனது முதல் சதத்தை அடித்தார். இதைத்தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் U19 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும், இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவராகவும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராகவும் வைபவம் சூரியவன்சி சாதனை படைத்திருக்கிறார். இந்திய அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles