இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி எஸ் கே இளம் வீரர் ஆயுஸ் மத்ரே அதிரடி அரை சதம் அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சங் 7 பந்தில் 7 ரன்கள், கேப்டன் ருதுராஜ் 22 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
ஒருமுனையில் அதிரடியாக விளையாடிய 18 வயதான ஆயுஸ் மத்ரே 43 பந்துகளில் 5 சித்தர்கள் ஆறு பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் சர்ப்ராஸ் கான் 12 பந்தில் 32 ரன், சிவம் துபே 28 பந்தில் 45 ரன் எடுத்தார்கள். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ஆயுஸ் மத்ரே சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக குறைந்த வயதில் அரைசதம் அடித்தவராக சாதனை படைத்தார். சுரேஷ் ரெய்னா 21 வயதில் அரைசதம் அடித்து இந்த சாதனையை செய்திருக்க, இவர் 18 வயதில் இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

