2 போட்டி ஜெய்சாச்சு திமிருல கம்பீர் மீண்டும் அதைச் செஞ்சார்.. அதான் இங்கிலாந்து வெச்சது ஆப்பு – பாகிஸ்தான் வீரர் பசித் அலி பேச்சு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20ஐ தொடர் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2ல் இந்திய அணியும், கடைசியாக நடந்தப் போட்டியில் இங்கிலாந்தும் வெல்ல 2-1 என தொடர் நீடிக்கிறது.

- Advertisement -

மூன்றாவது வெற்றியைப் பெற்று தொடரை வெல்ல இந்திய அணிக்கு அற்புதமான வாய்ப்பு இருந்தும் அதனைத் தவறவிட்டது. இதற்க்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் திட்டமிடல் தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி சுட்டிக் காட்டியுள்ளார். ராஜ்கோட்டில் நடந்த 3வது டி20ஐ போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது.

- Advertisement -

வருண் சக்ரவர்த்தியின் சூழலில் (5 விக்கெட் ஹால்) இங்கிலாந்து பரிதவித்த போதிலும் பென் டக்கெட் & லிவிங்ஸ்டன் அதிரடியில் 171 ரன்களை அடைந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியால் 20 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே அடித்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என எண்ணி இந்திய இரண்டாவதாக பேட்டிங் செய்தது இதற்க்கு ஓர் காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

வழக்கமாக பேட்டிங்க்குச் சாதகமான ராஜ்கோட் ஆடுகளம் 200 ரன்களை சராசரியாகக் கொண்டது என போட்டிக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றையப் போட்டியில் பவுன்ஸ் கூடுதலாக இருந்தது. இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியதாவது, ” ஆடுகளம் 200 ரன்கள் அடிக்கக் கூடியதாக இருக்கும் என நினைத்து இந்தியா டாஸ் வென்று பந்துவீசியது. மேலும் 2 போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து வென்றதால் மீண்டும் அதனையே கம்பீர் செய்யப் போய் அது தலைக் கீழாக மாறியது. “

” கௌதம் கம்பீரின் தந்திரம் பலிக்கவில்லை. அவரின் திட்டத்திற்கு மாறாக நேற்று ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கும் சாதகமாக அமைந்துவிட்டது. ஒரு வேளை இந்தியா போட்டியை வென்று இருந்திருந்தால் அப்போதே தொடரை கைப்பற்றி இருக்கும். தற்போது 2-1 என இருப்பதால் இன்னும் சுவாரசியமாக இருக்கப் போகிறது. ” என்றார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles