ஆஸ்திரேலியாவில் லக்கேஜ் தூக்கிய விவகாரம்.. மௌனம் கலைத்த பாக் வீரர் ஷஹீன் அப்ரிதி.. நடந்தது என்ன.?

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறாமல் முதல் சுற்றோடு வெளியேறியது. அந்த அணியின் மோசமான ஆட்டத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ஷான் மசூத் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக சாகின் அப்ரிதி நியமிக்கப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து வஹாப் ரியாஸ் புதிய தேர்வு குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி டிசம்பர் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்நிலையில் சிட்னி விமான நிலையத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அவர்களது லக்கேஜை அருகில் இருந்த அற்ற குன்றில் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதனங்களில் வைரலானது.

- Advertisement -

மேலும் அணியின் வீரர்களே தங்களது லக்கேஜை வக்கீல் ஏற்றி வைத்த சம்பவம் கிரிக்கெட் உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான உண்மையான செய்தி வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும் அந்த அணியின் டி20 கேப்டனுமான ஷாஹின் அப்ரிதி.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” சிட்னி விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியதும் எங்களது அடுத்த விமானம் 30 நிமிடத்தில் தயாராக இருந்தது. மேலும் இரண்டு பணியாளர்கள் மட்டுமே லக்கேஜ் ட்ரக்கில் ஏற்றும் வேலையை செய்து கொண்டிருந்தனர். எங்களுக்கு அடுத்த விமானத்திற்கு காலதாமதம் ஆகிக் கொண்டிருந்ததால் நாங்களும் அவர்களுக்கு உதவி செய்தோம்”.

- Advertisement -

அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ததால் சீக்கிரமாக எங்களால் லக்கேஜ் முழுவதையும் ஏற்ற முடிந்தது . இது வெறும் அணி அல்ல இது எங்கள் குடும்பம் என தெரிவித்திருக்கிறார் ஷாகின் அப்ரிதி. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி வருகின்ற 6-ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் வைத்து நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே என்று அழைக்கப்படும் 26 ஆம் தேதி மெல்போன் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி சிட்னி நகரில் வைத்து நடைபெறுகிறது. இந்தப் போட்டியுடன் பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles