நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணியை மோசமாக தேர்வு செய்தது தான் காரணம் என பத்ரிநாத் குற்றம் சாட்டி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் பிரதான ஸ்பின்னர் அகேல் ஹுசைன் இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் குல்ஜப் இடம்பெற்றார். மேலும் அணியில் மூன்று இடதுகை வேகபந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.
இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்போது ” இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலில் சிஎஸ்கே முக்கியஸ்தர்கள் அணி தேர்வில் பெரிய சொதப்பலை செய்து வருகிறார்கள். நேற்று ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு உதவினாலும் கூட உங்களுடைய முக்கிய ஸ்பின்னர் ஹூசைன் விளையாடி இருக்க வேண்டும். குல்ஜப் ஆடி இருக்கக் கூடாது”
“மார்ஸ் அதிரடியாக நொறுக்கி கொண்டிருந்த நேரத்தில் சிஎஸ்கே பவுலர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நேற்று மூன்று இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். மூவரும் ஒரே மாதிரி வீசக்கூடியவர்களாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

