மொத்த வித்தையையும் இறக்கிய ஆயுஷ் மாத்ரே.. ஏமாற்றிய ரிஷப் பண்ட், பட்டிதர்.. இந்திய ஏ அணி தடுமாற்றம்!

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அதற்கேற்ப காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட், தற்போது முழு ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதிரடி அரைசதம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஹெர்மன் 71 ரன்களையும், ஹம்சா 66 ரன்களையும், ரூபின் 54 ரன்களையும் எடுத்து அசத்தினர். இந்திய ஏ அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளையும், ப்ரார் மற்றும் மானவ் சுதார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

- Advertisement -

இதையடுத்து இந்திய ஏ அணிக்காக சாய் சுதர்சன் – ஆயுஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்த நிலையில், அதிரடியாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 76 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 65 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆயுஷ் பதோனி மட்டுமே 38 ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அசத்திய ஆயுஷ் மாத்ரே

வேறு எந்த வீரரும் 35 ரன்களை கூட கடக்கவில்லை. இதனால் இந்திய ஏ அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்தப் போட்டியில் 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. யு19 அணியில் இருந்து ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு ஆயுஷ் மாத்ரே முன்னேறி வந்திருக்கிறார். 

இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடும் பட்சத்தில், விரைவில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பின், சிஎஸ்கே அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக ஆயுஷ் மாத்ரே தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles