தோனியின் வழியை பின்பற்றும் ஸ்டார்க்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போவது உறுதி.. அவரே தெரிவித்த கருத்து

- Advertisement -

இந்தியாவில் 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வழியாக சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதன் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கலந்து கொண்டு கொல்கத்தா அணி தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க், கிரிக்கெட் விளையாட்டில் மகேந்திர சிங் தோனியை போன்று பின்பற்ற போவதாக அவரே சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்காமல் இருந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கை இந்த முறை கொல்கத்தா அணி அவரை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தொகை இதுவாகும். அப்போதிருந்தே இவர் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தது.

இவருக்கு கொடுக்கப்பட்ட தொகை அதிகம் என்றும், கொல்கத்தா நிர்வாகம் தேவையே இல்லாமல் வீண் செலவு செய்தது என்றும் விமர்சனங்கள் இருந்தன. அதேபோல ஸ்டார்க் ஆரம்பகட்ட போட்டிகளில் தனது சரியான பங்களிப்பை வழங்கவில்லை. இருப்பினும் கொல்கத்தா அணி மற்ற வீரர்களின் திறமையால் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்தது. ஆனால் பிளே ஆப் போட்டிகளுக்குப் பிறகு ஸ்டார்க்கின் பந்துவீச்சு அபாரமானதாக இருந்தது.

- Advertisement -

பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவரது அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் கடைசிப் போட்டியில் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த வெற்றிக்கு பின்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய ஸ்டார்க் சில முக்கிய கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

அது குறித்து ஸ்டார் விரிவாக கூறும்பொழுது
“கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்லத் தகுதியான அணி. நாங்கள் சிறந்த பவுலிங் யூனிட் கொண்டு உள்ளோம். இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது அபாரமான ஒன்று. நான் இன்னும் எத்தனை ஆஸ்திரேலிய தொடர்களில் இடம் பெறுவேன் என்று தெரியவில்லை. சில வகை போட்டிகளில் இருந்து விடை பெற்று எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க:காரணம் கூறி இனி தப்பிக்க முடியாது.. எல்லாமே அவங்களுக்கு சரியா அமைஞ்சிருக்கு.. வாசிம் அக்ரம் பேட்டி

அதற்குப் பிறகு ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாட எனக்கு ஆர்வமாக உள்ளது. கொல்கத்தா அணியில் தான் தொடர்ந்து நீடிப்பதாக நம்புகிறேன் இன்று ஸ்டார்க் கூறி இருக்கிறார். மகேந்திர சிங் தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று ஐபிஎல் தொடர்களில் மட்டும் எப்படி பங்கேற்று வருகிறாரோ, அதேபோல ஸ்டார்க்கும் சூசகமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று ஐபிஎல்லில் மட்டும் பங்கேற்க விரும்புவதாகவும் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles