மறைக்காம சொல்றேன்.. கோலி என்ன இன்ஸ்டாவில் பிளாக் செய்தார்.. காரணத்தை கேட்டு தல சுத்திடுச்சு – மேக்ஸ்வெல் பேட்டி

விராட் கோலி மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லும் இப்போது நண்பர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர்களது உறவு பெரும்பாலும் கசப்பான உறவாகவே இருந்து வந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல், சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தி ஷோமேன்’ என்ற புத்தகத்தில், பஞ்சாப் கிங்ஸுடனான தனது சர்ச்சைக்குரிய நேரத்தையும் பிறகு ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சேர்ந்தவுடன் கோஹ்லி எவ்வாறு தனக்கு ஆதரவு அளித்தார் என்பதையும் ஊடகங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்ட தருணம்:

2017 ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டின் தொடக்க நாளில், பீல்டிங் செய்யும் போது கோலி வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதனால் அவர் தோள்பட்டையே தாங்கிப் பிடித்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனை பார்த்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்யும் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனை மேக்ஸ்வெல் வலது தோள்பட்டையை தாங்கி பிடித்தவாறு கேலி செய்தார்.

- Advertisement -

இந்தப் போட்டியின் போது இரு அணியினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். இதனால் கோபமடைந்த கோலி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளத்திலிருந்து மேக்ஸ்வெல்லை பிளாக் செய்திருக்கிறார்.

ஐபிஎல் இன் போது கசிந்த ரகசியம்:


ஆஸ்திரேலியா அணியின் வீரர் மேக்ஸ்வெல் கூறியதாவது”நான் RCBக்கு செல்கிறேன் என்று தெரிந்தவுடன், விராட் தான் முதலில் எனக்கு மெசேஜ் செய்து என்னை அணிக்கு வரவேற்றார். நான் ஐபிஎல்-க்கு முந்தைய பயிற்சி முகாமிற்கு வந்தபோது, நாங்கள் இரண்டு பேரும் சிறிது நேரம் பயிற்சி செய்து விட்டு வெளிப்படையாக அரட்டை அடித்து கொண்டிருந்தோம்.

- Advertisement -

அப்பொழுது, நான் கோலியிடம் “உங்களை நான் இதுவரை சமூகவலை தளத்தில் தேடியும் காணவில்லையே நீங்கள் சமூக வலை தளத்தில் கணக்கே வைத்திருக்கிறீர்களா …”என்றேன். அப்பொழுது யாரோ ஒருவர்,“அவர் உங்களை பிளாக் செய்யவில்லை..” என்றார். அப்பொழுது தான் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்தது தெரியவந்துள்ளது உடனே மேக்ஸ்வெல் கோலியிடம் நேரடியாக “நீங்கள் என்னை பிளாக் செய்தீர்களா..?” என்று கேட்டேன். உடனே கோலி சிரித்தபடி “ஆம்” என்றார். அன்றைக்கு அந்த டெஸ்ட் தொடரில் என்னை கேலி செய்தது எனக்கு வெறுப்பாகிவிட்டது அதனால் நான் உங்களை பிளாக் செய்தேன் என்று கலாய்த்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles