ஐபிஎல்லை விடுங்க.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல.. டி20 உலக கோப்பைல பாருங்க.. உஸ்மான் கவாஜா நம்பிக்கை

அனைத்து சர்வதேச நாடுகளும் டி20 உலக கோப்பைக்கு மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் இந்த முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் மிகத் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

- Advertisement -

இதில் ஐபிஎல்லில் ஆண்ட அணிகளான சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை போன்று ஐசிசி தொடர்களில் ஆண்ட அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். ஏற்கனவே பல உலகக் கோப்பைகளை வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்த முறை டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதன்படி இந்த முறை மிட்சல் மார்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. இதில் ஸ்டானிஷ், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தியாவில் உள்ள ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பங்கேற்று விளையாடினர். ஆனால் இதே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இந்தத் தொடரில் மிக சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதனால் அவர்களது மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையிலும் தொடருமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா ஐபிஎல் க்கும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. அது முற்றிலும் வேறுபட்டது உலகக்கோப்பைத்தொடர் என்றால் ஆஸ்திரேலியா வீரர்கள் வேறு லெவலில் செயல்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து காவாஜா முழுமையான விளக்கம் அளிக்கும் பொழுது
“ஐபிஎல் பார்முக்கும் சர்வதேச ஃபார்முக்கும் சம்பந்தம் கிடையாது. மேக்ஸ்வெல் சர்வதேச தொடர்களில் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்தவர். நீண்டகாலமாக சர்வதேச தொடர்களில் விளையாடி வரும் எந்த ஒரு வீரருக்கும் மீண்டும் மீண்டும் அசத்த முடியாது என்பது தெரியும். மிடில் ஆர்டரில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆக வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட் தொடரை பொருத்தவரையில் அது எளிதல்ல.

- Advertisement -

இருப்பினும் மேக்ஸ்வெல் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினால், தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து விடுவார். எனவே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதெல்லாம் முக்கியமில்லை. அதற்காக தனது ஆட்டமுறையில் மாற்றிக்கொள்ள தேவையில்லை. அவர் அவரது பாணியிலேயே விளையாடி அவரது ஆட்டத்தினை கண்டெடுத்து விடுவார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கேப்டனாக நான் கற்றுக் கொண்டது இதைத்தான்.. அப்போதுதான் அனைத்திற்கும் உங்களால் தீர்வு காண முடியும்.. ரோகித் சர்மா பேட்டி

உஸ்மான் கவஜா கூறுவதும் சரியே. மேக்ஸ்வெல் எப்போது எல்லாம் ஐபிஎல் தொடர்களில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறாரோ அப்போதெல்லாம் சர்வதேச தொடர்களில் ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடக்கூடியவர். எனவே இந்த டி20 உலக கோப்பையிலும் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles