ஜிம்பாப்வே கூட நாங்க தோத்தா என்ன.. 2023 பைனல்ல இந்தியாவை அடிச்சத மறந்துட்டீங்களா.. கம்பேக் உண்டு – ஹெட் பேச்சு

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 169 ரன்கள் இரண்டு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியால் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அந்த அணி 19.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதுவரையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்ததில்லை என்ற சிறப்பு வரலாற்றை ஜிம்பாப்வே அணி தக்கவைத்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் தோல்விக்கு பிறகு பேசி உள்ள டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது ” நாங்கள் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். மேலும் விளையாடும் பொழுதுதான் பந்து கொஞ்சம் ஒட்டி வருவது தெரிந்தது. ஆனால் இரண்டு பேர் விளையாடும்போதும் ஒரே மாதிரி ஆடுகளம் இருக்கும் என்று உணர்ந்தோம். மேலும் இந்த ஆடுகளத்தில் ஜிம்பாப்வே கொடுத்த 169 ரன்கள் என்பது எடுக்கக் கூடியதுதான் என்று நாங்கள் நம்பினோம். எங்களுக்கு இந்த ஸ்கோரை துரத்த முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது”

- Advertisement -

“ஆனால் நாங்கள் துவக்கத்தில் நான்கு விக்கெட்டுகளை வேகமாக இழந்து விட்டோம். இது எங்களை அழுத்தத்தில் வைத்து விட்டது. நடுவில் எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. ஆனால் அது போட்டியை முடிக்கும் அளவுக்கு எங்களை கொண்டு செல்லவில்லை. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் எங்களுக்கு நிறைய காயங்கள் இருந்தது. பிறகு நாங்கள் அதிலிருந்து மீண்டு வந்து இறுதிப் போட்டியில் இந்திய அணியை வென்று உலகக் கோப்பையையும் வென்றோம். இந்த முறையும் நாங்கள் இதிலிருந்து மீண்டு வந்து விடுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles