அஷ்வின் பெயரில்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் பெறப் கூடிய திறன் கொண்டவர் இவர் தான்.. அடித்துச் சொல்லும் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட்டில் தோல்வியைத் தழுவியது. 450 இமாலய ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பாகிஸ்தானை 89 ரன்ககுக்கு சுறுட்டியது ஆஸ்திரேலிய பவுலிங். நாதன் லயனின் 5 விக்கெட் ஹால் அதற்க்கு முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

- Advertisement -

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் சேர்த்து பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய லெஜன்ட்ஸ் பட்டியலில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஆண்டர்சன், கும்ப்ளே, பிராட், மெக்கராத், வால்ஷ் ஆயோருக்கு அடுத்து 8வது இடத்தில் தற்போது லயன் உள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய வீர்ரகளில் வார்னே (708), மெக்கராத் (563) லயனுக்கு முன் இருக்கின்றனர். எப்படியும் மெக்கராத்தை ஒன்றரை ஆண்டுகளில் தண்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வார்னேவின் தகர்த்த இயலுமா எனக் கேட்டால் கடினமே என பலர் சொல்வர். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அண்மையில், நாதன் லயன் நிச்சயம் 700 விக்கெட்டுகள் பட்டியலில் இனைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ என்னைக் கேட்டால் நாதன் லயன் இன்னும் 4 – 5 ஆண்டுகள் விளையாடுவார். ஒரு வருத்தற்கி 10 டெஸ்ட்கள் எனக் கணக்கிட்டால் இன்னும் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகள் அவரது கரியரிலில் உள்ளது. ஒரு போட்டிக்கு சராசரியாக நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகள் என்றால் கூட 200 விக்கெட்டுகள் அவரது பெயரில் சேர்க்கப்படும். அப்படியானால் 700 விக்கெட்டுகள் மொத்தம். ”

நாதன் லயன் மேல் அதிக நம்பிக்கையை கம்மின்ஸ் வைத்துள்ளார். எந்த ஆடுகளத்திலும் சிறப்பை வெளிக்காட்டகூடிய லயன், இந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் இல்லாததை மிகவும் மிஸ் செய்ததாக தெரிவித்தார். 36 வயதாகும் நாதன் லயன் இன்னும் 4 ஆண்டுகள் தாராளமாக விளையாடலாம். தற்போது 123 போட்டிகளில் 501 விக்கட்டுகளில் நின்று கொண்டிருக்கும் இவர் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொன்னது போலவே 700 மைல்கல்லை எட்டலாம்.

- Advertisement -

அதே சமயம் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடிப்பது நாதன் லயணுக்கு மிகப் பெரிய சவாலாகவும் பெருமையாகவும் இருக்கும். மறுபக்கம் நம் தமிழக வீரர் அஷ்வின் 589 விக்கெட்டுகளில் உள்ளார். 37 வயதாகும் இவர் லயனைப் போல தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆடுவாரா என்பது சந்தேகமே. நிச்சயம் 600 விக்கெட்டுகளை பெற்றுவிடுவார், 700 தான் கடினமாக இருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles