பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடி இந்திய அணி இமாலய இலக்கை நிர்னையித்ததொடு, பின்னர் பவுலிங்கிலும் துல்லியமாக செயல்பட்டு அபார வெற்றியைப் பெற்றனர். சொந்த மைதானத்தில் தோல்வியைத் தழுவியதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அவமானம்.
ரோஹித் ஷர்மா இல்லாத பட்சத்தில் புதிய கேப்டன் பும்ரா அணியை அற்புதமாக தலைமைத் தாங்கி தன் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்களை தடம் புரளச் செய்தார். அவர் தான் ஆஸ்திரேலிய உள்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. இது குறித்து ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ” உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் எங்களது பேட்டர்களும் அவருக்கு இணையாக உலகத் தரம் வாய்ந்தவர்கள் தான். அவரைச் சமாளிக்க நிச்சயம் ஒரு வழியை செய்வோம். “
” இன்னிங்சில் அவரை ஆழகமாகப் பந்துவீச பைது இரண்டாவது ஸ்பெல்லில் பழைய பந்தில் அவரைத் தாக்குவோம். கடந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் இதே முறையில் கவுண்டர் அட்டாக் செய்ததைப் பார்த்து இருப்பீர்கள். பும்ரா மட்டுமல்ல, இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மற்ற 2 இளம் வீரர்களையும் அடுத்தப் போட்டியில் சமாளிப்போம். ” என்றார்.
மேலும், ” பேட்டர்ஙளாக நாங்கள் ஒவ்வொருவரும் களத்தில் நிலைத்து நின்று ஆடி சதம் அடிக்க வேண்டுமென எண்ணிவோம். அது நடக்கவில்லை எனில் ஏமாற்றம் தான். இது தான் எங்கள் மனநிலை. நாங்கள் நினைத்தவாறு எங்களது சட்டம் இல்லை என்பதால் முதல் ஆட்டம் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. “
” ஒரு டெஸ்ட் போட்டியின் தோல்விக்கே எண்களைக் குறைவாகப் பேசி மட்ட்டம் தட்டுகிறார்கள். இதற்க்கு முந்தைய டெஸ்ட் தொடரில் எங்களின் வெற்றிகரமான பாணியைப் பார்த்து இருப்பீர்கள். அதே போல மீண்டும் வருவோம். ” என மிகவும் நம்பிக்கையாகப் பேசினார் அலெக்ஸ் கேரி.

