AUS vs PAK.. 33.5 ஓவரில் 259 ரன்.. 73 ரன்களுக்கு 7 விக்கெட்.. 62 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கை வீழ்த்தி ஆஸி மிரட்டல் வெற்றி.!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோற்ற ஆஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. மறுபுறம் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று மூன்றாவதாக ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது .

- Advertisement -

இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி அவர்களது அரை இறுதி வாய்ப்பிற்கான ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் தாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச்சை இன்றைய போட்டியில் களமிறங்கிய ஒசாமா மிர் தவறவிட்டார்.

- Advertisement -

இது எவ்வளவு பெரிய தவறு என்பது ஆட்டம் போக போக பாகிஸ்தான் அணினருக்கு புரிய ஆரம்பித்தது. துவக்க வீரர்களான வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி முதலாவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தனர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மார்ஸ் 108 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழக்க ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்களில் வெளியேறி ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை அளித்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 163 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதன் பிறகு ஸ்டைனீஸ் 21 ரன்களில் ஆட்டம் இழக்க இங்கிலீஷ் 13 ரன்களும் லபுச்சேன் 8 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டார்க் இரண்டு ரன்களும் ஹேசல்வுட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆடம் ஜாம்பா 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 367 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிதி 5 விக்கெட்டுகளும் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்க்கு ஜோடியாக இவர்கள் இருவரும் 134 ரன்கள் சேர்த்து நிலையில் 61 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல்லா ஷபிக் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு வீரரான இமாமுல் ஹக் 70 ரன்னிலும் கேப்டன் பாபர் அசாம் 18 ரன்னிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி சற்று பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

ஆனால் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷக்கீல் ஆகியோர் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பிற்கு நம்பிக்கை அளித்தனர். இந்நிலையில் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த சவுத் ஷகீல் ஆட்டம் இழக்க மீண்டும் பின்னடைவை சந்தித்தது பாகிஸ்தான். நான்காவது விக்கெட் இருக்கு களமிறங்கிய இப்திகார் அஹமது அதிரடியாக விளையாடி மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஜாம்பா அவரது விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை வீழ்ச்சி அடைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் விக்கெட்டையும் கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை முழுவதுமாக சரித்தார் ஜாம்பா. இறுதியாக முஹம்மது நவாஸ் 14 ரன்களிலும் ஒசாமா மீர் ரன் எதுவும் எடுக்காமலும் ஹசன் அலி 8 ரன்னிலும் சாஹின் அப்ரிதி 10 ரன்னிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 45,3 ஓவர்களில் 305 ரன்கள் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலக கோப்பையில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது..

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா 4 விக்கெடுகளும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இலங்கை அணி உடனான போட்டிக்கு முன்பாக முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா பத்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தோல்வியால் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் லக்னோவிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பையிலும் பல பரிட்சை நடத்த இருக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles