AUS vs NED.. 20 ஓவர்களில் நெதர்லாந்தை பேக் செய்த ஆஸ்திரேலியா.. மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம்.. ஜாம்பா மேஜிக்.. உலக சாதனை வெற்றி.!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 24 ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின . இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த மிட்சல் மார்ஸ் ஒன்பது ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும் இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் டேவிட் வார்னருடன் சேர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 68 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு தொடர்ந்து களமிறங்கிய லபுசேன் 47 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் இங்கிலீஷ் 14 ரன்களில் ஆட்டம் இழக்க டேவிட் பார்மருடன் ஜோடி சேர்ந்தார் கிளன் மேக்ஸ்வெல். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் தனது ஒரு நாள் போட்டி கேரியரில் 22 ஆவது சதத்தையும் இந்த உலகக்கோப்பை போட்டி தொடரில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் 6 சதங்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அவர் 93 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய கேமெரூன் கிரீன் எட்டு ரண்களில் ரன் அவுட் முறையில் வெளியேற பேட் கம்மின்ஸ் களமிறங்கினார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடி ரண்களை குவிக்க உதவியது. அதிரடியாக ஆடிய கிளன் மேக்ஸ்வெல் நாற்பதாவது ஓவரில் களமிறங்கி உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் இவர் தென்னாப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் இலங்கை அணிக்கு எதிராக புரிந்த சாதனையை முறியடித்தார். 40 பந்துகளில் சதத்தை அடித்த மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை சிதறடித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி நானூறு ரன்களை நெருங்கியது. சிறப்பாக ஆடி அவர் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனால் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 399 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. நெதர்லாந்து அணியின் பஸ் டீ லீட் பத்து ஓவர்கள் பந்துவீசி 115 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார். உலகக்கோப்பை தொடரில் மிகவும் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது இதுவாகும். அந்த அணியின் வான் பீக் 74 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நான் ஒரு ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து.

- Advertisement -

அந்த அணியினர் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அவர்கள் அணியில் விக்ரம்ஜித் சிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஆக்கர்மேன் மற்றும் பஸ் டி லீட் இருவரும் 10 ரன்கள் மற்றும் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மிச்செல் மார்ஸ் 2 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ்,ஹேசல்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு அந்த அணி 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆஸ்திரேலியா முறியடித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் நெட் ரன் ரேட் நெகட்டிவிலிருந்து பாசிட்டிவாக மாறி இருக்கிறது .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles