பும்ரா ஓவரில் 32 ரன்கள்.. அந்த பையனுக்கு பயமில்ல.. கோலி & பும்ராவை சண்டைக்கு இழுத்த 19 வயது வீரர் கொன்ஸ்டாஸ்

1-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டிராபி சமனில் இருக்கும் நிலையில் நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் இன்று அதிகாலை மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

- Advertisement -

முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய மெக்ஸ்வீனி தடுமாரியதால் அவர் விடுவிக்கப்பட்டு அவரின் இடத்தில் ஆட இளம் வீரர் கொன்ஸ்டாஸ் அணிக்குள் வந்தார். தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் வாயைப் பிளக்கும் வகையில் திகைத்தார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் இந்தத் தொடரில் அனைவரையும் ஆண்ட பந்துவீச்சாளர் பும்ராவை குறி வைத்து அடித்தார் இந்த 19 வயது கொன்ஸ்டாஸ். முதல் 2 ஓவர்களில் பந்துகளை ஆடாமல் விட்ட அவர், பும்ராவின் 3வது ஓவரில் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். மறு பந்தே ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்சர். பின்பு மீண்டும் ஒரு பவுண்டரி என மொத்தம் 14 ரன்கள் அந்த ஓவரில்.

- Advertisement -

பும்ரா மீண்டும் வந்து வீசிய ஓவரில் மறுபடியும் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என 18 ரன்கள் விளாசியதோடு அரை சதத்தையும் கடந்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் முக்கியமாக பும்ரா செய்வதறியாது நின்றது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கவாஜா – கொன்ஸ்டாஸ் பார்தனர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்க்க, ஜடேஜா பந்தில் கொன்ஸ்டாஸ் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

65 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர் என அறிமுகப் போட்டியிலேயே அசத்தியுள்ளார் கொன்ஸ்டாஸ். தனது ஆட்டம் முடிந்தப் பின்பு பேட்டில் கொன்ஸ்டாஸ், ” பும்ராவை மீண்டும் குறி வைத்து அடிக்கக் காத்திருக்கிறேன். அடுத்த இன்னிங்சில் மீண்டும் எனக்கு பந்து வீசுவார் என எதிர்பார்க்கிறேன். ” என சவாலாகப் பேசினார்.

- Advertisement -

இந்த பும்ராவின் ஓவரில் அடிக்கப்பட்ட 18 ரன்கள் தான் அவர் டெஸ்ட்டில் ஒரு ஓவரில் விட்டுக் கொடுத்த அதிக ரன்கள் ஆகும். மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட்டில் அவரது பந்தில் சிக்சர் விளாசபட்டுள்ளது. 2வது இன்னிங்சில் கொன்ஸ்டாஸ் – பும்ரா மோதல் அனல் பறக்கும். இதற்க்கு இடையில் கொன்ஸ்டாஸ் நடந்துப் போகும் போது கோலி அவரை வேண்டுமென்றே உரசி வம்புக்கு இழுத்தார். இது மேலும் பரபரப்பை உண்டாகியது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles