ஆசியன் கேம்ஸ்.. மொத்தம் 18.2 ஓவர்.. தங்கம் வென்ற இந்தியா.. பேட்டிங் பண்ணாமல் தங்கம் கிடைத்தது எப்படி.? முழு விவரம்.!

சீனாவில் நடைபெற்று வரும் 39ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த வருடம் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டியின் டி20 வடிவம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாவது முறையாக கிரிக்கெட் இடம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின . மழை பெய்ததால் தாமதமாக துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது மைதானத்தின் சூழலுக்கு ஏற்றவாறு இந்தியா ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் வளமான சுழல் பந்து கூட்டணியுடன் களம் கண்டது.

- Advertisement -

இந்தப் போட்டியின் துவக்கம் முதலே ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் டாப் பார்டர் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி ஒரு கட்டத்தில் 52 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் குல்பதின் நைப் மற்றும் ஷஹிதுல்லா இருவரும் அணியை சர்வில் இருந்து மீட்டனர்.

- Advertisement -

ஆறாவது விக்கெட் இருக்கு இருவரும் இணைந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு 5 விக்கெட் விலை இழந்திருந்தது. ஷஹீதுல்லா 43 பந்துகளில் 49 ரன்களுடனும் நைப் 24 பந்துகளில் 27 ரன்கள் உடனும் களத்தில் இருந்தனர். அப்போது மீண்டும் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி நடைபெறுவதற்குரிய அவகாசம் இல்லாததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சீனாவில் தற்போது தான் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் அங்கு மைதானத்தில் மலை வடிகால் வசதிகளும் இல்லை. இதனால் போட்டியை தொடர்ந்து நடத்துவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போனது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சில் அர்ஷிதீப் சிங் சிவம் துபே ஷபாஷ் அகமது மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

- Advertisement -

போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தாலும் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியை விட இந்திய அணி அதிக ரன் ரேட் பெற்றிருந்ததால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.

முன்னதாக வெண்கல பதக்கத்திற்கு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. கிரிக்கெட் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்திய அணி மொத்தமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 101 பதக்கங்களை வென்றிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles