என்ன மனுஷன்யா.. கண்ணீர் விட்டு அழுதப்போ ரோகித் செய்த உதவி.. தோனியை போல சுயநலமற்ற வீரர் என அஸ்வின் நெகழ்ச்சிப் பதிவு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பாதியிலிருந்து வெளியேறினார். குடும்பத்தின் அவசர சூழ்நிலை காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறிய அஸ்வின், அதற்கு பின்னர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ராஜ் கோட்டில் இருந்து சென்னை சென்று விட்டு அடுத்த நாளே இந்திய அணியுடன் இணைந்து விளையாடினார். மீதமுள்ள போட்டிகளையும் விளையாடி தனது சிறப்பான பங்களிப்பினை அளித்து இந்திய அணி தொடரை கைப்பற்றவும் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

முக்கியமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தனது அம்மாவின் உடல்நிலை சரி இல்லை என மனைவி கூறியதும் தான் அங்கேயே உடைந்து அழுததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். உடனடியாக சென்னை திரும்ப ராஜ்கோட்டில் இருந்து விமானத்தை தேடிய நிலையில் 6:00 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை என்று தெரிய வர, செய்வதறியாவது திகைத்து நின்ற அஸ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிட்டும் செய்த உதவி தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அஸ்வின் தனது youtube சேனலில் நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது
“நான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அம்மாவின் உடல்நிலை குறித்து எனக்கு தகவல் வந்தது. நான் உடனடியாக மருத்துவரிடம் இது குறித்து கேட்டறிந்தேன். எனவே உடனடியாக சென்னை செல்ல விமானத்தை தேடி நிலையில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை.

- Advertisement -

அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். தகவல் அறிந்து உடனடியாக என்னிடம் வந்த ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என் சூழ்நிலையை உணர்ந்து நீ உடனடியாக சென்னை கிளம்பு என்று கூறி தனி விமானம் ஏற்பாடு செய்து தர எனக்கு உறவினர். மேலும் அந்த கடினமான சூழ்நிலையில் என் மனநிலையை சற்று சீராக வைத்துக் கொள்ள அவரது நண்பர் கமலேஷை என் கூடவே இருக்கச் சொல்லி வழி அனுப்பினார். நான் அணியின் கேப்டனாக இருந்தாலும் இத்தகைய உதவிகள் செய்வேன். ஆனால் என் சக வீரரை வீட்டிற்கு கிளம்பச் சொல்லி விடுவேன்.

ஆனால் என் கூடவே ஒருவரை அனுப்பி சூழ்நிலை சரியாக வைத்துக் கொள்ளும்படி கூறியிருப்பேனா? என்பது கேள்வி தான். ஆனால் ரோஹித் சர்மா செய்த இந்த உதவி என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது. அன்றுதான் ரோகித் சர்மாவின் சிறந்த தலைமை பண்பை நான் உணர்ந்தேன். நானும் நிறைய கேப்டன்களின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளேன். ஆனால் சுயநலம் இன்றி செயல்படும் ஒரு வீரரை நான் அரிதாக பார்க்கிறேன்.

அதனால் தான் தோனிக்கு ஈடாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று அவர் உச்சத்தில் இருக்கிறார். கடவுள் யாருக்கும் அவ்வளவு எளிதாக எதையும் கொடுத்து விட மாட்டார். இந்த சூழ்நிலை எனக்கு தோனியையும் நினைவூட்டியது. அவரும் இது போன்ற சூழ்நிலைகளில் இதை செய்யக்கூடிய வீரர்தான்” என்று அஸ்வின் நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles