அஷ்வின் & ஜடேஜா சேப்பாக்கின் கில்லிடா.. அஷ்வின் அதிரடி சதம்.. வங்கதேச நாகினியை அடக்கிய நம் இந்திரன் – சந்திரன் ஜோடி !

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. காயம் பின்னர் ரிஷப் பண்ட் திரும்புவது, பயிற்சியாளராக கம்பீரின் முதல் டெஸ்ட் ஆகியவையால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டாஸ் வென்ற வங்கதேச அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து.

- Advertisement -

இந்திய அணியின் ஓப்பனர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஜெஸ்வால் களமிறங்கினர். வங்கதேச வீரர் ஹாசன் முஹமத் அவரின் வேகத்தால் டாப் ஆர்டரை உலுக்கினார். ரோஹித் 6, கோலி 6 மற்றும் ஷுப்மன் கில் டக் அவுட் ஆகி பெரிய பின்னடைவைக் கொடுத்தனர்.

- Advertisement -

இந்த சரிவில் இருந்து ஓரளவு அணியை மீட்டது ஜெஸ்வால் – பண்ட் ஜோடி. இரண்டு இடதுகை பேட்ஸ்மேனும் இணைந்து 62 ரன்கள் செத்த்த நிலையில் பண்ட் 39 ரன்களில் வெளியேறினார். டெஸ்ட்டில் தான் எங்கு விட்டுச் சென்றாரோ அதனைத் தொடர்ந்துள்ளார். நிலைத்து ஆடிய ஜெஸ்வால் அரை சதம் விளாசி 56 ரன்கள் சேர்த்துப் பின்னர் அவுட் ஆனார்.

- Advertisement -

உடனே அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 16 ரங்களில் விக்கெட்டை பரிகொடுக்க இந்திய அணி 144/6 என தடுமாறியது. மறுமுறை கை ஓங்கிய வங்கதேச அணியை அடக்கியது இந்திய டெஸ்ட்டின் கோட் ஜோடி அஷ்வின் – ஜடேஜா தான். வழக்கமாக பவுலிங்கில் இரட்டையளர்களாக இணைந்து எதிரணியை அடக்கும் இவர்கள், இன்று பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி அணியை மீட்டனர். இந்த ஜோடி மேற்கொண்டு எந்த ஒரு விக்கெட்டும் விழாத அளவு பார்த்துக் கொண்டனர்.

நம் சென்னை பையன் அஷ்வின் சொந்த ஊரில் இரண்டாவது சதம் அடித்து அமர்க்களப் படுத்தினார். சென்னை என்றாலே அவர் கில்லி தான். இந்திரனாக அஷ்வின் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் சந்திரனாக ஜடேஜா அவர் பங்குக்கு அரை சதத்துடன் வங்கதேசத்தைப் பந்தாடினார். இன்னும் அஷ்வின் 102* மற்றும் ஜடேஜா 83* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாள் முடிவில் இந்தியா 80 ஓவர்களில் 339/6 என முடித்தது. இதில் இந்த ஜோடியின் பங்கு 195* ரன்கள்.

- Advertisement -

டெஸ்ட்டில் 6வது சதத்துடன் அஷ்வின் மற்றொரு சாதனையில் ஒரு படி முன் சென்றுள்ளார். டெஸ்ட்டில் குறைந்தது 30 ஐந்து விக்கெட் ஹால் எடுத்த வீரர்களில் யாரும் 2 சதத்துக்கு மேல் அடித்தது இல்லை. இந்த ரெக்கார்டில் அஷ்வின் 6 சதங்களுடன் எட்டாத உயரத்தில் உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles