கம்பீர் என்னையே டீம்ல விட்டு தூக்கிட்டார்.. அப்பதான் அந்த முடிவை எடுத்தேன்.. ஆனாலும் மதிக்க காரணம் இருக்கு – அஸ்வின் பேச்சு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருந்தாலும் அவரை தான் போற்றுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பாதியிலேயே தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறியது ஏன்? என்பது குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “கம்பீர் பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். ஆனாலும் அவரை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் அவர் தனிப்பட்ட வீரர்களை விட அணியை முன்னிறுத்துகிறார். அவர் எப்போதும் தனிப்பட்ட வீரர்கள் குறித்து பேசுவதில்லை அணியை பற்றி மட்டுமே பேசுகிறார். இது நான் போற்றக்கூடிய ஒன்று”

- Advertisement -

“மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் நான் பிளேயிங் லெவனில் இல்லை. அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வைக்கப்பட்டார். எனவே என்னுடைய காலம் முடிந்துவிட்டது என்று உணர்ந்து நான் ஓய்வை அறிவித்தேன்” என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles