மிகவும் எதிர்பார்ப்புகள் கொண்ட தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மாவிருந்து வருகிற நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்டர்களுக்கும் நம் இந்தியா பவுலர்களுக்கும் நடுவே அனல் பறக்கும் மோதல் நடக்கும். அதில் ஒன்று தான் ஸ்மித் v அஷ்வின். ஆஸ்திரேலியாவில் கடந்த முறை நடந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் நல்ல ஆதிக்கம் செலுத்தினார்.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக தான் எவ்வாறு செயல்படுவதாகவும் அதை ஸ்மித் எப்படி எதிர் கொள்கிறார் குறித்தும் அஷ்வின் விரிவாகப் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் தான் எப்போதும் ஸ்மித்தின் திட்டங்களை உடைதுள்ளதாகவும் அதற்கான முக்கிய காரணத்தையும் அஷ்வின் கூறியுள்ளார்.
இந்திய நட்சத்திர சுழற்ப்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியதாவது, ” ஸ்டீவன் ஸ்மித் குறிப்பாக சுழற்பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். அதற்காக தனிப்பட்ட பயிற்சிகள், புதிய நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காடுவார். ஆனால் அவரின் புதிய டெக்னிக்குகளை நான் கடந்த சில வருடங்களாக உடைத்துள்ளேன். “
” ஐ.பி.எலில் டெல்லி, புனே அணிகளுக்காக நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடிய சமயத்தில் ஸ்மித்தின் பேட்டிங் பயிற்சிகளை நான் கவனித்துள்ளேன். அவர் என்ன பயிற்சி செய்கிறார், பவுலிங் எதை விரும்புகிறார் & வெறுக்கிறார் என்பதைப் பற்றி எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ” என்றார் அஷ்வின்.
மேலும், ” ஸ்மித் அதிகம் யோசிக்கக் கூடிய ஓர் பேட்ஸ்மேன். அவர் எப்போதும் பந்துவீச்சாளரை விட நாம் சிறந்தவராக இருக்க வேண்டும் என நினைக்கும் குணம் கொண்டவர். ஸ்மித் துவக்கத்தில் என்னை சுலபமாக சமாளித்து அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால் பின்னர் அவரின் டெக்னிக்கை நாம் உடைத்து நான் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்துகிறேன். ” என கூறியதோடு ஓர் எச்சரிக்கையும் மறைமுகமாக விடுத்துள்ளார் அஷ்வின்.

