ஐபிஎல் 2025 க்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பற்றி குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் அசிஷ் நெஹ்ரா, “பும்ரா சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், ரூ.520 கோடி கூட போதுமானதாக இருக்காது” என்று கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் பும்ராவை, ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாகவே 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது. 30 வயதான அவர் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் தனது பணியை திறம்பட செய்து வருகிறார். குறிப்பாக, பார்டர் கவாஸ்கர் போட்டியில் ரோகித் சர்மா இல்லாத குறையை கேப்டனாகி முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கனியே ருசிக்க பெரும் பங்கு வகித்தார், பும்ரா.
கேப்டன்ஷிப்பை அருமையாக கையாண்டார்:
பும்ராவின் கேப்டன்ஷிப்பை பற்றி பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, “பந்துவீச்சாளராக பும்ரா பல முறை செயல்பட்டுள்ளார். ஆனால் ரோகித் சர்மா விளையாடவில்லை, முதல் இன்னிங்ஸ் நீங்கள் கேப்டனாக இருக்கும்பொழுது கூடுதல் அழுத்தம் இருக்கும். ஆனால் அந்த அழுத்தத்தை பும்ரா கையாண்ட விதம் பாராட்டுக்குரியதாக இருந்தது”
520 கோடியல்ல:
மேலும் அவர், “நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் இந்திய மண்ணிலேயே ஒயிட் வாஸ் ஆனபிறகும் பும்ரா இந்திய அணியே கையாண்ட விதம் புத்திசாலித்தனமாக இருந்தது, பும்ராவின் இந்த மனப்பக்குவத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது. ஒருவேளை பும்ரா மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்றிருந்தால். அவருக்கான தகுதி 520 கோடியல்ல அதைவிட மேலானது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார், ஆஷிஷ் நெஹ்ரா.

