என்னோடு சேர்ந்து பும்ரா பாயை இந்த கிளப்பிற்கு நான் வரவேற்கிறேன்.. ஆனால் இந்த பெருமை முதலில் அடைந்தது நான் தான் – அர்ஸ்தீப் சிங்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பந்துவீச்சில் கலக்கிய அர்ஸ்தீப் சிங் இரண்டு ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தனது பந்துவீச்சு குறித்து அவர் பேசும் போது “ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறதோ அதனை முழுமையாக பயன்படுத்தி அணிக்கு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதை எனது திட்டம். பந்தின் தையல் பகுதியை ஆடுகளத்தில் கடினமாக அடிக்கும் போது உதவி இருப்பது போல் தோன்றியது. ஒன்று பந்து பவுன்ஸ் ஆகிறது அல்லது உள்ளே வெளியே என்று செல்கிறது.

- Advertisement -

எனவே பந்தின் தையல் பகுதியை ஆடுகளத்தில் கடினமாக அடித்து வீசுவதே எனது திட்டமாக இருந்தது. பும்ரா பாய் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். முதலில் நான் 100 விக்கட்டுகள் எடுத்தேன். எனக்குப் பிறகு அவர் எடுத்திருக்கிறார். அவரை இந்த கிளப்பிற்கு வரவேற்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து கேப்டனின் வேலையை எளிதாக்க விரும்புகிறோம். நாங்கள் இருவரும் இருப்பதால் கேப்டனின் பணி எளிதாகிறது என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles