ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஆண்ட்ரே ரசல் திடீரென்று ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது சிஎஸ்கே உள்ளிட்ட ஆல்ரவுண்டர் தேவை இருக்கிற அணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் அவரே தற்போது ஓய்வு பெற்றதற்கான காரணத்தை கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் நீங்கள் ஆல் ரவுண்டராக இருப்பது என்பது எப்போதுமே சவாலான விஷயமாகும். நீங்கள் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் தயாராக இருக்க வேண்டும். அது இந்த வயதில் எனக்கு எல்லா விதத்திலும் தயாராவது என்பது சவால் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
ஏனென்றால் நான் பேட்டிங் செய்து முடித்த பிறகு பந்து வீச்சில் இரண்டு ஓவர்களாவது வீச வேண்டும் என்று நினைப்பேன். மேலும் இம்பேக்ட் பிளேயராக விளையாட எனக்கு விருப்பம் இல்லை. இம்பாக்ட் வீரராக களம் இறங்கி இரண்டு சிக்ஸர்கள் அடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்று பேசி இருக்கிறார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனியை தாக்கும் விதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

