எனக்கு விராட் கோலியை விட தோனியை தான் பிடிக்கும்.. ஏன்னா கோலி இதை ஓபனா செஞ்சுருவாரு – அமித் மிஸ்ரா சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீரரான அமித் மிஸ்ரா கடைசியாக 2025 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி கேப்டனாக இல்லை என்றால் தாம் அதிக போட்டிகள் விளையாடி இருப்பேனா? என்கிற கேள்விக்கு சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “தோனி கேப்டனாக இல்லை என்றால் நான் அதிக போட்டியில் விளையாடியிருப்பேனா என்று கேட்கிறீர்கள்.? ஆனால் அவர் கேப்டனாக இல்லை என்றால் நான் இந்திய அணியில் இருந்திருக்கவே முடியாது. நான் அவரின் கீழ்தான் அறிமுகமே ஆனேன். அவர் கேப்டனாக இருந்ததால்தான் நான் திரும்ப மீண்டும் கம்பேக் கொடுத்தேன். எனது விஷயங்களை நேர்மறையாக பார்க்கலாம்.

- Advertisement -

விராட் கோலி எம்எஸ் தோனியா என்று கேட்டால் நான் எம்எஸ் தோனியை தான் கூறுவேன். அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலியிடம் ஆக்ரோஷம் இருக்கிறது. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எதிரணிக்கு தெரியக்கூடாது. இதனால் தோனி மற்றும் விராட் கோலி இருவரின் அணுகுமுறை வேறு. இருவருக்குமே போட்டிகளை ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அணுகுமுறை வேறானது. இந்த விஷயத்தில் எனக்கு தோனியை தான் பிடிக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles