நான் முன்னாள் சிஎஸ்கே சொல்றேன்.. பாகிஸ்தான் மாதிரி சிஎஸ்கேவ இஷான் கிஷான் பண்ணிட்டார் – அம்பதி ராயுடு பேச்சு

தற்போது இஷான் கிஷான் ஒரு முதிர்ச்சி அடைந்த பேட்ஸ்மேனாக சிறப்பான முறையில் மாறிவிட்டதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக மிக முக்கியமான போட்டியில் 47 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இஷான் கிஷான் இருந்தார். மிகவும் பொறுப்பாக இருந்து ஆட்டத்தை கடைசிவரையில் எடுத்துச் சென்றார்.

- Advertisement -

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும்போது “நேற்றைய ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இப்படியான ஒரு ஆடுகளம்தான் கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொடுக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இஷான் தானாக முன்வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டு அசத்தலாக முடித்து வைத்தார். நேற்றும் அதைத்தான் செய்திருக்கிறார்”

- Advertisement -

“இப்போது அவரைப் பார்க்கும்போது ஆடுகளம் எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் மாறி விளையாடும் பல்திறமை கொண்ட வீரராக மாறிவிட்டார். அவர் இப்போது எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles