கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தமிழ்நாட்டு வீரர் சாருக் கான் விளையாடி வருகிறார். ஆனால் அவர் சிறப்பாக விளையாடாததால், அவர் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலேயே 9 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஷாருக் கானை பஞ்சாப் அணி வாங்கி இருந்தது. இதுவரையில் அவர் ஐபிஎல் தொடரில் தன் பெயரை சொல்லும் ஒரு இன்னிங்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “ஷாருக் கான் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் இதுவரையில் அவர் தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடியதில்லை. அவர் நின்று விளையாடி போட்டிகளை முடித்து வைக்க வேண்டும். அவரை குஜராத் அணி நம்புவதற்கு கடமைப்பட்டுள்ளார்”
“அவர் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு முன்னேறி உள்ளாரா? தனது ஆட்டத்தில் ஏதாவது மேம்பட்டு இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அவரைத் தொடர்ந்து விளையாட வேண்டுமா? என்று யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

