“தோனி கிளம்பிட்டா சிஎஸ்கே நிலைமை இப்படி ஆகிவிடும்.. ஆனா மும்பை.. “-அம்பத்தி ராயுடு பரபரப்பான பேட்டி

சென்னை, மும்பை ரசிகர்கள் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் சென்னை அணி ரசிகர்கள் மாறுபட்டவர்கள் என்று சென்னை, மும்பை அணிகளுக்காக விளையாடிய அம்பத்திராயுடு கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் இல் வெற்றிகரமாகத் திகழும் இரண்டு அணிகள் சென்னை மற்றும் மும்பை. இதில் இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர்.

- Advertisement -

இதில் தோனி தலைமையின் கீழ் 2010,2011,2018,2021,2023ல் சாம்பியன் பட்டத்தையும்,ரோஹித் ஷர்மா தலைமையின் கீழ் 2013,2015,2017,2019,2020ல் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளன.இதில் சென்னை அணி 2016,2017ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சென்னை,மும்பை அணிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சென்னை அணியின் 2 ஆண்டுகள் தடைக்காலம் முடிந்து 2018ம் ஆண்டு ஐபில்லில் நுழையும் போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
இதில் இரு ஐபில் அணிகளுக்கும் ஆடிய அம்பத்தி ராயுடு இரு அணிகளின் ரசிகர்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது
” இரண்டு அணிகளின் ரசிகர் பட்டாளத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு வீரராக நான் சொல்வேன், மும்பை அணியின் ரசிகர்கள் அணி சார்ந்து வீரர்களை ஆதரிக்கிறார்கள். மும்பை அணியில் எந்த வீரர் விளையாடினாளும் அவர் முதலில் மும்பை வீரரே. அவருக்கு முழு ஆதரவையும் மும்பை ரசிகர்கள் வழங்குவார்கள். ஆனால் சென்னை அணி ரசிகர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்.

- Advertisement -

அவர்கள் முதலில் தோனியின் ரசிகர்கள். பிறகு தான் சென்னை அணியின் ரசிகர்கள். மைதானத்தில் தோனி இல்லையென்றால் மைதானம் பாதியாவது நிரம்பும் என்பது ஆச்சரியம் தான். அவர்களுக்கு முதலில் தோனிதான்” என்று கூறினார்.

ராயுடு கூறியதும் ஏறத்தாழ சரிதான். சென்னை அணி தடைக்காலம் முடிந்து திரும்ப வருவதைக் குறிக்கும் விதமாக தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தல ‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து போட்டோ வெளியிட்டதை சென்னை அணி ரசிகர்கள் டிரென்ட் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles