ருதுராஜ் ஐடியாவுல ஆடுனா சிஎஸ்கே ஜெயிக்க முடியாது.. தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – அம்பதி ராயுடு கருத்து

நேற்று சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டி முடிவில் பேசியிருந்த ருதுராஜ் கண்டிஷன் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ஸ்கோர் அடிக்க வேண்டும் என்பது தெரியவில்லை, எனவே அதிரடியாக விளையாட வேண்டி உள்ளது, இதனால் அவுட் ஆக வேண்டி உள்ளது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு நேர் எதிராக பேசியுள்ள அம்பதி ராயுடு கூறும்போது ” நேற்றைய ஆடுகளத்தில் 160 ரன்கள் எடுத்திருந்தால் துரத்துவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். அதே சமயத்தில் பேட்டிங் செய்ய கண்டிஷன் கடினமாக இருந்தது. ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதற்கு தகுந்தது போல் விளையாடி இருக்க வேண்டும் “

- Advertisement -

“அவர்களிடம் அதற்கான பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தவறான முறையில் விளையாடி அவுட் ஆனார்கள். இளம் அணி எனவே போட்டியை எடுத்துச் சென்று அமைப்பதற்கு காலமாகும் என்று சொல்லலாம். ஆனால் இங்கு இந்த காரணம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles