ஆஸி ஐபிஎல்-ல ஏன் சதி பண்றீங்க.. இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தை செய்யலாமா.. இதை ஏத்துக்க முடியாது – அம்பதி ராயுடு கோபம்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்து வீசவில்லை. இதுகுறித்து அம்பதி ராயுடு கடுமையான விமர்சனத்தை செய்திருக்கிறார்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயமடைந்த காரணத்தினால், அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடுவார் என்று கூறி ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது ” கேமரூன் கிரீன் கவர் டிரைவ் கூடத்தான் விளையாடுவார். அப்போது முழங்கையில் காயம் ஏற்படலாம். அதற்காக அவர் பந்தை மெதுவாக தட்டி விளையாடுவாரா? ஒரு தொழில் முறை தொடரில் ஆஸ்திரேலியா செய்திருக்கும் இந்த விஷயம் சுத்தமான முட்டாள்தனம். இப்படி எல்லாம் நடக்கவே கூடாது”

- Advertisement -

“இப்படிப்பட்ட ஒரு தொழில் முறை தொடரில் ஒரு வீரர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த வீரரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் முடிவு செய்தது அபத்தமானது. இது தொடரக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles