கோலி இல்ல.. உலகத்துல எங்க மண்ணுல எங்களுக்கே ஆட்டம் காட்டியது.. இந்த இந்திய வீரர் மட்டும் தான்.. தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் பேட்டி

சவுத் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டி20, மற்றும் ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, சவுத் ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், டேவிட் பெடிங்காம், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், மற்றும் மார்கோ ஜான்சனின் சிறப்பான பங்களிப்பால், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாத நிலையில், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து, நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி தொடரை வென்றுள்ள இந்திய அணி, இதுவரை சவுத் ஆப்பிரிக்காயில் டெஸ்ட் போட்டி தொடரை வென்றதில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த முறை டெஸ்ட் போட்டி தொடரில் வென்று, வரலாற்றை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று, டெஸ்ட் போட்டி தொடரை சமநிலையில் முடித்து, இந்திய அணி நாடு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட, சச்சின் டெண்டுல்கர் சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் தனது சிறப்பான பங்களிப்பை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் என, சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் பிடிஐ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், 15 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள சச்சின் டெண்டுல்கர், 1161 ரன்களுடன், சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சிறப்புடன், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து அணியின் வாலி ஹேமண்ட் உள்ளார்.

- Advertisement -

பிடிஐயிடம் ஆலன் டொனால்ட் பேசுகையில், ” எந்த பந்தை விளையாட வேண்டும், எந்த பந்தை விளையாடாமல் விட வேண்டும் என்பதில் சச்சின் டெண்டுல்கர், சவுத் ஆப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார். எங்களது பந்துவீச்சை, ஸ்டெம்புக்கு முன்னால் நிற்க மட்டும் செய்யாமல், எங்களுக்கு எதிராக சிதறடிக்கும் செய்த ஒரே வீரர், எனக்கு தெரிந்து சச்சின் டெண்டுல்கர் மட்டுமே” என தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடாதே இந்திய பேஸ்மேன்களுக்கு ஆலோசனையாக, “சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், எந்த பந்தை விளையாடக்கூடாது என்பதில் கவனமாகவும், களத்தில் நீண்ட நேரம் நிற்கும் போது ரன்களை குவிக்கலாம். வெளியில் செல்லும் பந்துக்களை விளையாடாமல், பந்துகள் உங்களை நோக்கி வரும் வரை காத்திருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் உங்களை நோக்கி பந்துகளை வீசும் போது, நீங்கள் ரன்களை எளிதில் எடுக்கலாம். கேப்டவுன் மைதானம் வேக பந்துவீச்சாளர்களுக்கு, சாதகமாக இருக்கும் என்பதால் பேஸ்மேன்களுக்கு இங்கு விளையாடுவது சவால் நிறைந்ததாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் களத்தில் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும்” என ஆலன் டொனால்ட் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles