பும்ராவிடம் நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை.. சிராஜ் தான் பின்பற்றுகிறேன்.. பவுலர் ஆகாஷ் தீப் பேச்சு

இந்தியா ஏ அணிக்காக துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகள் மழை பொழிந்து பிசிசிஐ கவனத்தை ஈர்த்து இந்திய சீனியர் டெஸ்ட் அணியில் நுழைந்தார் ஆகாஷ் தீப். பெங்காலைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமாகி, கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக விளையாடவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். இவர் அண்மையில் பும்ரா உட்பட சில வேகப்பந்து வீச்சாளர்களில் தான் யாரிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டிருப்பதாக பேசியுள்ளார்.

- Advertisement -

ஆகாஷ் தீப் கூறியதாவது, ” ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கும் தவுதுவமான ஸ்டைல் மற்றும் திறன் இருக்கும். அதனால் நான் ஒரு பவுலரை மற்றும் பின்பற்றுவது இல்லை. நான் அதிகம் பின்பற்றும் பந்துவீச்சாளர் எனக் கேட்டால் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கசிகோ ரபாடவைச் சொல்வேன். “

- Advertisement -

” இந்திய பந்துவீச்சாளர்களில் நான் மொஹமத் சிராஜிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். ஆனால் நடப்பு உலகின் தலைசிறந்த பவுலராக விளங்கும் பும்ரா அவர்களிடம் இருந்து எதுவும் கற்றுக் கொள்ள இயலாது. காரணம் அவரைப் பின்பற்றுவது மிகவும் கடினம். கடவுளால் சிறப்பாக தனித்துவமாக உருவாக்கப்பட்டவர் ஜஸ்பிரித் பும்ரா. ” எனன்றார் ஆகாஷ் தீப்.

தற்போது இவர் துலிப் டிராபியில் விளையாடி வருகிறார். அடுத்து வரும் வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொஹமத் ஷமி இல்லாத பட்சத்தில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த தீவிரமாக இருப்பதாக ஆகாஷ் தீப்பே பேசினார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles