இது தெரியாம போச்சே.. ராணா செஞ்ச இந்த ஒரு ட்ரிக் மட்டும் செஞ்சிருந்தா.. உலக கோப்பை நம்ம கையில் இருந்திருக்கும் – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் பெர்த்தில் நவம்பர் 22 தேதி நடைபெற்றது. இதில், இந்திய அணியானது 150 ரன்களில் ஆட்டமிழந்தது.

- Advertisement -

ராணா தனது அறிமுகத்தில் ஆட்டத்தில் 1/33 என்ற இலக்கை பதிவு செய்தார். மேலும், முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது 67/7 என்ற இலக்கை எடுக்க, இந்திய அணியின் ராணாவின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-காவஸ்கர் டிராபியின் 2024-25 ஆம் ஆண்டின் முதல் டெஸ்ட் மற்றும் முதல் இன்னிங்ஸின் போது, டிராவிஸ் ஹெட்டின் மதிப்புமிக்க விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும், அவரே பார்டர் கவாஸ்கர் போட்டியில் முதலிலே அறிமுக செய்தது தவறு என சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் கருத்து:

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் ஒன்றில் , ராணாவின் விளையாட்டு திறமை பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறியதாவது, “நான் அவருக்கு 50 க்கு 50 என்ற மதிப்பெண் தான் கொடுப்பேன். ஏனென்றால், அவர் வீழ்த்திய ஒரே விக்கெட், அதுவும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட், அது பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அவர் ஸ்டம்பை நோக்கி பந்தை வீசியபோது, பந்தின் அங்கிள் சரியாக வந்து, பிச் செய்த பிறகு சற்று வெளியே சென்றது. இதனால், ஆஸ்திரேலியா வீரரான டிராவிஸ் ஹெட் பந்துவீச்சாளர் முற்றிலும் வீழ்த்தப்பட்டார். இந்த நிகழ்வானது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த விக்கெட் மட்டும் நவம்பர் 19 அன்று விழுந்திருந்தால், இந்திய அணிக்கு அன்று உலகக் கோப்பை கிடைத்திருக்கும்” என்று கூறினார்.

இது சரியான வழி அல்ல:

மேலும் அவர் “ஹர்ஷித் ராணாவை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால், நீங்கள் அவரை நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான மும்பையில் நடந்த டெஸ்டில் விளையாட வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், பும்ராவும் மும்பையில் விளையாடவில்லை. நீங்கள் ராணாவை அங்கு விளையாட வைத்த பின்னர், இந்தியா ஏ அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கலாம். இவை அனைத்தும் செய்யப்பட்டிருந்தால், அது சரியாக இருந்திருக்கும்.

ஆனால், நீங்கள் அவரை நேரடியாகவே பார்டர்-காவஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் அறிமுகமாக்கி விட்டீர்கள். எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் இப்படி செய்தது வீரர்களின் திறமையை முறையாக கையாளுவதற்கான சரியான வழி அல்ல” என்று கூறி முடித்தார்.

மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அதனால், ரோஹித் சர்மா அந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய பவுலர்களை களம் இறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles