நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணியில் பும்ரா இருந்தும் 220 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள். இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் இம்பேக்ட் பிளேயராக டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் சூரியகுமார் வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். இதுவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “உங்கள் அணியில் பும்ரா இருக்கிறார். ஆனால் நீங்கள் 220 ரன்கள் விட்டுக் கொடுத்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன்கள் கொடுத்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் ரன் கொடுத்ததை புரிந்து கொள்ள முடியவில்லை”
“இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் மும்பை தரப்பில் தொடர்ந்து இரண்டு ஓவர்கள் பந்து வீசியது ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா மட்டுமே. பவர் பிளேவில் போல்ட் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசவைக்கப்பட்டார். யாருக்கும் தொடர்ந்து இரண்டு ஓவர்கள் கொடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டன்சி சரியில்லை” என்று கூறியிருக்கிறார்

