போதும்டா சாமி.. இவங்க ரெண்டு பேர் பத்தி பேசினா எனக்கு இதயத்துடிப்பே அதிகமாகுது – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்திருக்கிறது. இதில் இரண்டு போட்டியில் இந்திய அணியும் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் குறித்து தாம் இனி பேசப்போவதில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “டி20 உலக கோப்பைக்கு நாம் மிக அருகில் இருக்கிறோம். எனவே இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் என்ன? உங்கள் அணியில் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள்? என்பது குறித்த கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்த பிரச்சனை என்னுடைய இதயத்துடிப்பை வேகமாக்கி வருகிறது.

- Advertisement -

இது நிச்சயமாக இந்திய அணிக்கு சீரியசான பிரச்சனை தான். எனவே இனி அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் இருவரை பற்றிய கேள்விகள் அடங்கும். ஒருவேளை இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இன்னும் சிக்கல்கள் பெரிதாகும். ஆனால் அப்படி எதுவும் நடக்கக் கூடாது. எனவே இனி இந்த விஷயம் குறித்து நான் பேசப்போவதில்லை இதிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles