இந்திய அணி வருகிற ஏழாம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள பயிற்சி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களம் இறங்க உள்ளது. இதற்காக இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்பது கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
சஞ்சு சாம்சன் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படாமல் குறுகிய ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் அதே வேலை மறுபுறம் வாய்ப்பு கிடைத்த இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கடைசி போட்டியில் சதம் அடித்து டி20 உலக கோப்பை கதவை அதிரடியாக உடைத்து எரிந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சாம்சனுக்கு இனி வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று ஆகாஷ் சோப்ரா சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது “சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் போதிய வாய்ப்புகளை வழங்கி விட்டது. சாம்சன் என்றோ ஒரு நாள் சிறப்பாக செயல்பட கூடியவர்தான். ஆனால் அதற்காக தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பது சரியாக இருக்காது. எனவே அவர்தான் தொடக்க ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மாவுடன் ஜோடி சேர வேண்டும். எனக்கு தனிநபரை விட இந்திய அணி தான் முக்கியம். எனவே இந்திய அணியின் நலனை பார்த்தால் இந்த முடிவே சரியானது” என்று அவர் பேசி இருக்கிறார்.

