இந்திய டெஸ்ட் அணிக்காக தொடர்ச்சியாக நம்பர் 4ல் சிறப்பாக விலையாடியதோடு வெளிநாட்டு டேட்ஸ் தொடர்களின் ஸ்பெஷலிஸ்ட்டாக திகழ்ந்த வீரர் அஜிங்கியா ரஹானே. அவர் டெஸ்ட் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதை பற்றியும் பிசிசிஐ குறித்தும் வருத்தமாக பேசியுள்ளார் ரஹானே.
டெஸ்ட்டில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரஹானே இடையில் ஃபார்ம் அவுட் ஆகி அடுத்தடுத்த தொடர்களில் சுதப்பினார். அதனால் அவரை பிசிசிஐ ஒதுக்கியது. இருப்பினும் உள்ளூர் போட்டிகள், ஐ.பி.எல் மூலம் மீண்டும் தன் திறனை வெளிக்காட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து, சிறப்பாக விளையாடினார். இருந்த போதிலும் அடுத்த தொடரில் அவர் அணியிலிருந்து நீக்கத் தான் பட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ” சில வருடங்கள் முன்பு நான் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எலில் சிறப்பாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பிடித்தேன். அதன் பிறகு என் கையில் என்ன இருக்கிறது ? அனுபவம் மிக்க வீரரான நான் மீண்டும் அணிக்குத் திரும்பியதால் 2/3 தொடர்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். “
” சவாலான தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் நிச்சயம் அணிக்கு நான் தேவைப்படுவேன் என எண்ணி வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை. அது எனக்கு பெரிய சங்கடமாக அமைந்தது. என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை என தேர்வாளர்களிடம் நேரடியாக கேட்க எனக்கு விருப்பமில்லை. அவ்வாறு கேட்கச் சொல்லி பலர் வலியுறுத்தினர். “
” ஆனால் அவ்வாறு நான் கேட்க தயாராக இருந்தாலும், அதற்கு பதில் அளிக்க எதிரில் இருப்பவர்கள் தயாராக இல்லை. ஆகையால் இது பற்றி சண்டையிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு பி.ஆர் டீம் என ஒன்று இல்லை. எனக்கு கிரிக்கெட் மட்டும் தான் தெரியும், அது தான் எனது பி.ஆர். நான் மீண்டும் அணிக்குத் திரும்புவேன் என எதிர்பார்க்கிறேன். ” என வருத்தமாக செய்துள்ளார் அஜிங்கியா ரஹானே.
தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ரஞ்சித் தொடரில் அற்புதமாக விளையாடி சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

