விராட் கோலி ரொம்ப திமிர் பிடித்தவரா?. அப்படி நினைக்காதீங்க அவர் அப்படி இருக்க முக்கியமான விஷயமே இதுதான்.. ரகானே உடைக்கும் சீக்ரெட்

நேற்று நடைபெற்ற முடிந்த இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அதிகபட்சமாக 93 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜின்கியா ரகானே சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியை பொறுத்தவரை களத்தில் எப்போதுமே 100 சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர். வெளியே இருந்து பார்த்தால் அவர் மிகவும் திமிர் பிடித்தவர் போல தெரியும். ஆனால் அதுதான் அவருடைய பலம் என்று ரகானே கூறுகிறார். மேலும் அவர் போட்டிக்கு தயாராகும் விதம் குறித்த சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வெளியில் இருந்து பார்க்கும்போது விராட் கோலியை திமிர் பிடித்தவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது, அவர் எப்போதும் ஏதாவது ஒன்று கற்றுக் கொள்ளும் உழைப்பிலேயே இருப்பார். அவரைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது போதாது. போட்டிக்கு முந்தைய இரண்டு நாட்களில் அவர் சக வீரர்களிடம் கூட அதிகம் பேச மாட்டார். எப்போதும் ஏர்போர்ட்ஸ் அணிந்து தனக்கான இசையை கேட்டுக் கொண்டே இருப்பார். அது தலைக்கனமோ அல்லது ஈகோவோ கிடையாது அது போட்டிக்கு தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ளும் விதமாகும். ஆரம்பத்தில் இது எங்களுக்கு புரியவில்லை, அதற்கு பின்னர் தான் இது அவரை ஒருமுகப்படுத்தும் முறை என்பதை உணர்ந்தோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles