கம்பீர் ஒட்டுமொத்தமா இந்திய கிரிக்கெட்டை முடிச்சிட்டார்.. இவ்வளவு திறமையான வீரரை யூஸ் பண்ணிக்கல – அகமத் சேஷாத் விமர்சனம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். கம்பீர் வெளியில் இருந்த அரசியலை இந்திய அணிக்குள் கொண்டு வந்துவிட்டார் என்றும், அவர் இந்திய அணியில் உள்ள திறமைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறார். கம்பீருக்கு இந்தியாவில் உள்ள சிறந்த திறமைகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அகமத் சேஷாத் பேசும்பொழுது “எந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுதும் கவனமாக செய்ய வேண்டும். கம்பீர் அரசியலுக்கு சென்றார் ஆனால் அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அரசியலில் வெற்றி பெற முடியாத அவர் இந்திய அணிக்குள் அந்த அரசியலை கொண்டு வந்து விட்டார். இது இந்திய அணியின் நல்ல பிம்பத்தை அழித்துவிட்டது”

- Advertisement -

“இந்திய அணியில் உலகத் தரமான குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் கம்பீருக்கு இந்திய அணியின் திறமைகளை பயன்படுத்தவும் நிர்வகிக்கவும் தெரியவில்லை. அவர் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் வீணடித்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles