15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நிகழ்த்தியுள்ள சாதனை.. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அசத்தல் பங்களிப்பு.. முழு விபரம் இதோ

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 112 வருடங்களில், ஒரு போட்டியில் தோற்றாலும் அடுத்தடுத்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள முதல் ஆசிய அணி என்று பெருமையும் பெற்றுள்ளது.

- Advertisement -

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி பிரச்சனைகளைக் களைந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

அதன் பிறகு ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை பந்தாடிய இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்குப் பிறகு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் கலக்கிய இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

பின்னர் தரம்சாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது டெஸ்ட் தொடரில் 15 வருடங்களுக்குப் பிறகு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கிய டாப் 5 வீரர்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி சாதனை படைத்திருக்கின்றனர். அணியின் தொடக்க ஆட்டக்காரர் எஸ் எஸ் வி ஜெய் ஸ்வால் 58 பந்துகளில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தி இருந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 103 ரன்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு களம் இறங்கிய சுப்மேன் கில் 150 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர் என 110 ரன்கள் விளாசினார்.

அதன் பிறகு இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தேவதத் படிக்கல் 103 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என விளாசி 63 ரன்கள் குவித்திருந்தார். இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கிய ஐந்து வீரர்களும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 50க்கும் மேற்பட்ட ரன்களை விழாசி வரலாறு படைத்திருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles