இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ள நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்கிற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கடந்த போட்டியின் போது தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக வீட்டிற்கு சென்றுள்ளார் என்று இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு என்ன காரணத்திற்காக அவர் சென்றார் என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் அவரது நெருங்கிய குடும்ப உறவினர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த சமயத்தில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று பும்ரா கிளம்பியதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள நான்காவது போட்டிக்கு அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து முக்கிய அதிகாரி ஒருவர் கூறும் போது “நான்காவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான். ஆனால் அதைவிட குடும்ப உறுப்பினரின் நலன் முக்கியம். எனவே அவர் பூரண குணம் அடைந்து திரும்பிய பிறகு பும்ரா பங்கேற்பார்” என்று கூறியிருக்கிறார்.

