என் நண்பன் கில் இல்லனா.. 3 டக் அவுட்டுக்கு பின்னாடி உலக கோப்பை திரும்பி வந்து இருக்க முடியாது – அபிஷேக் சர்மா பேட்டி

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தான் தொடர்ந்து மூன்று டக் அவுட்டுகள் ஆன பிறகு தன்னுடைய நண்பர் சுப்மன் கில் என்ன மாதிரியான அறிவுரையை கூறினார்? என்பது குறித்து அபிஷேக் ஷர்மா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து முதலில் சுப்மன் கில்லிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும் பொழுது “அபிஷேக் ஷர்மா டி20 ரேங்க் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு நாம் என்ன ஆலோசனை சொல்லிவிட முடியும்?” என்று மிகவும் அடக்கமாக பதில் கூறினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பேசிய அபிஷேக் ஷர்மா “நான் மூன்று டக் அவுட் ஆனதும் முதலில் அழைத்து சுப்மன் கில்லிடம் பேசினேன். அதற்கு அவர் ‘நண்பா நீயே இதை எல்லாம் சரி செய்து கொள்வாய்’ என்று கூறினார்”

- Advertisement -

“அவர் சொன்னது மிகவும் சிறிய வார்த்தைதான். ஆனால் எனக்குள் அது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒருவேளை இது நடக்காமல் போயிருந்தால் என்னுடைய மோசமான சாதனை இன்னும் பெரியதாக மாறி இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles