எல்லா அணிகளுக்கும் என்ன பத்தி நல்லா தெரியும்.. ஆனா அவங்களுக்கு எதிரா நான் இப்படி தான் தயார் ஆகிறேன்.. அபிஷேக் ஷர்மா பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் முதல் போட்டிக்குப் பிறகு அவர் பேசும் போது “எங்களுக்கு முதல் நாளில் இருந்தே திட்டம் இருந்து வருகிறது அதையே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 200 ஸ்டிரைக் ரேட் என்பது இருக்க வேண்டும். அதற்கான தெளிவான திட்டமிடல் என்பது இருக்க வேண்டும் என்பதை நான் வெகு சீக்கிரமாகவே புரிந்து கொண்டேன். எல்லா அணிகளுமே என்னுடைய பேட்டிங்கை பார்த்து இருக்கிறார்கள், அதனால் நான் எப்படி தயாராகிறேன் என்பது தான் விஷயம்.

- Advertisement -

நான் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுகிறேன் என்று சொல்ல மாட்டேன். அது எனக்கு வசதியானதாகவும் கிடையாது. நான் வலை பயிற்சியில் டைமிங் செய்து விளையாடவே விரும்புகிறேன். பந்தை கவனமாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு பார்த்து விளையாடறது தான் முக்கியம். அதையேதான் நான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். நீங்களே உங்களது வீடியோவை பார்த்தால் பவுலர்கள் உங்களுக்கு எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் புரிந்து கொள்ளலாம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles