கஷ்டமா இருக்கும் இருந்தும் சொல்றேன்.. கம்பீருக்கு சம்பந்தமே இல்ல.. சஞ்சு சாதிக்க உண்மையான காரணம் இதுதான்.. ஏபி டிவில்லியர்ஸ் ஓபன் டாக்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 4 நாள் கொண்ட டி20I போட்டியானது டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இதில், சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார். இதனால், இந்திய அணி 202/8 எந்த கணக்கே பதிவு செய்தது. மேலும், இந்திய அணியானது 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

- Advertisement -

சஞ்சு அதிரடியான ஆட்டத்தை குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏபிடி-யின் கருத்து:

ஏபிடி தனது யூடியூப் வீடியோ ஒன்றில் கூறியதாவது, “சஞ்சு சாம்சனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, அவரது விளையாட்டில் புதிய உந்துதல் கிடைத்திருக்கிறது, அது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அவரைப் பற்றிய சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், அவர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் விளையாட்டை மிகவும் இயல்பாக விளையாடுகிறார். அசத்தலான ஷாட்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணங்கள் அவருக்குள் இல்லை. அவர் தான் விளையாடும் உலகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்” என்று கூறினார்.

நான் அவரின் ரசிகன்:

மேலும் அவர் கூறியதாவது, “சஞ்சு இப்பொழுது தன் ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளார். அனைத்து வடிவ தேர்வுக் குழுவும் இதைக் கவனித்து வருகிறது என்று நான் நம்புகிறேன். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர், எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் அனைத்து போட்டி வடிவங்களிலும் விளையாடக்கூடியவர். அவருடைய இந்த மாற்றத்திற்கு பின்னால் கம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் லட்சுமணன் போன்றவர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உடனே அவர்களை நான் மரியாதை குறைவாகவும் சொல்லவில்லை”

- Advertisement -

“சஞ்சு சாம்சன் ஏதோ ஒன்றை உணர்ந்துள்ளார். அதனால் அவரின் விளையாட்டில் முதிர்ச்சி காணப்படுகிறது. சஞ்சு ரசிகர்களாகிய எங்களுக்கு இதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் அவரிடம் ஒரு தரம் உள்ளது, ஆறாவது தரம், அது வெளிப்படுவதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று கூறி முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles