விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க இதை மட்டும் செய்யுங்கள்.. ரகசியத்தை சொன்ன டிவில்லியர்ஸ்

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி டி20ஐ தொடரை 1-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சிறப்பாக முடித்துள்ளது. அடுத்ததாக டெஸ்ட் சீரிஸ் டிசம்பர் 26ம் தேதி துவங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் சென்சூரியன் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

தென்னாப்ரிகாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் எனும் கனவு இந்திய அணிக்கு இன்னுமும் ஓர் நிறைவேறாத கணவகாவே உள்ளது. இந்த முறையாவது வெற்றியை ருசித்து வரலாற்றில் இடம்பெற இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். முதல் போட்டி வேகப் பந்தவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக அமையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்தத் தொடரில் இந்திய அணி ஜெயிக்க முக்கியக் புள்ளியாக விளங்குபவர் விராட் கோலி. வேகத்துக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர்களை எவர் வலுவோடு சமாலிக்கிறார்களோ அந்த அணியின் பாகம் தான் வெற்றி பொய் சேரும். அந்த வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சேர்க்கும் ரன்கள் மிக முக்கியமாக இருக்கும், குறிப்பாக விராட் கோலி.

- Advertisement -

தென்னாபிரிக்கா ஆடுகளங்களில் கோலி இதுவரை அபாரமாக ஆடி நல்ல சராசரியை வைத்திருக்கிறார். 2018ம் ஆண்டு முதல் டெஸ்ட் நடக்கவுள்ள சென்சூரியன் மைதானத்தில் அவர் அடித்த அந்த சதம் வரலாற்றில் சிறப்பான இன்னிங்ஸ்களில் ஒன்றாக நிலைத்து நிற்கும். தென்னாபிரிக்கா மண்ணில் 51.3 சராசரியில் 719 ரன்கள் அடித்துள்ளார்.

இவரின் விக்கெட்டை எடுப்பதில் எதிரணி பவுலர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பார். காரணம் இவரை சாய்த்தால் மிச்சத்தை சுலபமாக சமாளிக்கலாம் என்ற கணக்கு தான். கொரோனா காலத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் விராட் கோலி சற்று மோசமான ஃபார்மில் இருந்தார். அப்போது ஸ்டம்புக்கு வெளியே வீசி ஸ்லிப்பில் கேட்ச் மூலம் அவரின் விக்கெட்டை பெரும்பாலாக எடுத்தனர்.

- Advertisement -

முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தன் யூட்டியூப் சேனலில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த அறிவுரைகளை கொடுத்துள்ளார். அவரும் விராட் கோலிக்கு ஸ்டம்புக்கு வெளியே அதாவது 4வது ஸ்டம்பில் வீசி கேட்ச்க்காக காத்திருப்பதே சிறந்த வழி என்றுள்ளார். இந்த தாக்குதலைத் தாண்டி விராட் கோலி வெல்வது சாமான்ய அல்ல.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles