இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி என்ன செய்ய முடியாது என்பது குறித்து அவருடைய நண்பர் ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் சிறந்த பினிஷர்கள் மற்றும் சிறந்த பவுலர்களை கொண்டு ஆர்சிபி அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது ” கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணம் அனைத்து வீரர்களும் பங்களிப்பு செய்தார்கள். இறுதிப் போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் மட்டும் எடுத்தாலும் மற்றவர்கள் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் கொடுத்தார்கள். அணியின் சுமையை தனியாளாக மட்டுமே சுமக்க முடியாது என விராட் கோலிக்கு தெரியும்”
“இருந்தபோதிலும் விராட் கோலிதான் அந்த அணியின் இதயம். இதற்கு காரணம் அவரது விளையாட்டு திறமை மட்டுமே கிடையாது. அவர் களத்திற்கு உள்ளே வெளியே என கொண்டு வரும் உற்சாகம் இளம் வீரர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இப்பொழுதும் அந்த அணியின் முதுகெலும்பு அவர்தான்” என்று கூறியிருக்கிறார்.

