இவருக்கு தேவையில்லாமல் அதிக தொகை தருகிறார்கள்.. அப்படி என்ன செய்துவிட்டார் ? முன்னாள் சென்னை வீரரை தாக்கிய ஏ.பி.டிவில்லியர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீகின் 2024 ஏலம் அண்மையில் சிறப்பாக முடிவடைந்தது. பரபரப்பான ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் வரலாற்று சாதனை படைக்கும் தொகைகளுக்கு விலை போயுள்ளனர். பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனில் அதிக குற்றச்சாட்டுகளுக்கு தள்ளபடுவர். இதனால் தொடருக்கு முன்னர் இருந்தே அவர்களுக்கு அந்த விலை ஓர் அழுத்தத்தை தரும்.

- Advertisement -

இந்த ஆண்டு முதல் முறையாக 20 கோடிகளுக்கு இரு ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலம் போயுள்ளனர். ஹைதரபாத் அணி பேட் கம்மின்ஸை 20.5 கோடிக்கும் கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கும் வாங்கியுள்ளது. இந்த இரண்டு வீரர்களும் அவர்களின் திறனுக்கு மேல் விற்கபட்டுள்ளதாக ஒரு பக்கம் பேச்சுகள் உள்ளன.

- Advertisement -

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தன் யூட்யூப் சேனலில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரைக் குறிப்பிட்டு, இவருக்கு தேவையில்லாமல் அணி நிர்வாகம் அதிக தொகை கொடுக்கிறது என தன் கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் அண்மையில் சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க்கை பற்றி அவர் பேசவில்லை.

- Advertisement -

பஞ்சாப் அணி எப்போதும் அதிகம் செலவிட்டு வீரர்களை வாங்குவர், குறிப்பாக வெளிநாட்டு நட்சத்திரங்களை. அதில் கடந்த ஆண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சம் கர்ரனை 18.5 கோடிக்கு வாங்கியது. இந்த ஆண்டு ஏலத்திற்கு முன் வரை இவர் தான் ஐ.பி.எலில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

சாம் கர்ரன் மற்றும் அவரது விலையைப் பற்றி டிவில்லியர்ஸ் பேசியதாவது, “ நான் சர்ச்சையை உண்டாக விரும்பவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை சாம் கர்ரன் தேவையில்லாமல் அதிக ஊதியதுக்கு அணியில் இருக்கிறார். நாம் அவரை மோசமான வீரர் எனக் குறிப்பிடவில்லை ஆனால் அவரின் ஐ.பி.எல் பெர்மபாமன்ஸை வைத்துப் பார்க்கையில் அப்படி தெரியும். ”

- Advertisement -

“ மேலும் இங்கிலாந்து அணிக்கு கூட அவர் அண்மையில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. பஞ்சாப் அணி இவரை வெளியே அனுப்பி இருந்தால் அவரின் பெரிய தொகைக்கு இன்னும் 2/3 வீரர்கள் கிடைத்திருப்பார்கள் எனச் சொல்கிறேன். மற்றபடி சாம்‌ கர்ரனினை நான் தாழ்வாக பேசவில்லை. ” என்றார்.

டிவில்லியர்ஸ் சொன்னது போலவே கடந்த ஆண்டு தொடரில் 14 போட்டிகளில் 276 ரன்களும் 10.22 எக்கனாமியில் 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கர்ரன் இந்த ஆண்டு ஐ.பி.எலில் தன் விலையை சரி என நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles