நான் சொல்றத கேளுங்க கம்பீர்.. அபிஷேக் வேணாம் சஞ்சு போதும்.. தொலைநோக்கா சிந்திங்க – ஆரோன் பின்ச் கருத்து

இந்திய அணி நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டிகள் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவருடைய இடத்தில் கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் இந்திய அணி நிர்வாகத்திற்கு வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி எப்படியும் இரண்டாவது சுற்று தகுதி பெற்று விடும். எனவே முதல் சுற்றில் வீரர்களை தேவையில்லாமல் பயன்படுத்தி பலவீனம் ஆக்கக்கூடாது. தற்போது உடல்நலம் இல்லாமல் இருந்து வரும் அபிஷேக் ஷர்மா முழு உடல் நலத்தோடு திரும்பி வரும்போது விளையாட வைத்தால் தான் சரியாக இருக்கும். எனவே தொலைநோக்காக சிந்தித்து அவரை இரண்டாவது சுற்று கொண்டு வந்தால் போதும் என ஆரோன் பின்ச் கூறியிருக்கிறார். முன்கூட்டியே விளையாட வைத்து அதனால் உடல்நிலை மோசமடைந்து அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு இழப்பாக அமைந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் தொலைநோக்காக சிந்திக்க வேண்டும். முதல் சுற்று வைத்து உலக கோப்பையை எந்த அணியும் வெல்ல முடியாது. இந்திய அணியை பொறுத்தவரையில் அடுத்தடுத்து வரக்கூடிய சுற்றுகள்தான் மிகவும் முக்கியமானது. இப்போதைக்கு உலக கிரிக்கெட்டில் மிகவும் சேதப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா. அப்படிப்பட்ட ஒருவர் முழு உடல் நலத்துடன் திரும்பி வருவதுதான் சரியானதாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் போட்டி எவ்வளவு பெரிய போட்டியாக இருந்தாலும் அவரை அவசரப்பட்டு கொண்டு வரக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles