சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்டில் அஷ்வின், கில், பண்ட் மூவரின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி மற்றும் கௌதம் கம்பீர் பெரிய தவறு செய்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் வலிமையான பார்ட்னர்ஷிப் மூலம் 376 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 149 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாளே இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே டாப் ஆர்டர் சுதப்பியது.
அணியைச் சரிவில் இருந்து கில் – பண்ட் அதிரடியாக ஆடி மீட்டனர். இருவரும் சதமடிக்க இந்திய அணி 514 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இன்னும் 2½ நாட்கள் போட்டியில் பாக்கி இருந்த போதிலும் கேட்டேன் ரோஹித் ஷர்மா டிக்ளர் செய்தார். களத்தில் கில் மற்றும் கே.எல்.ராகுல் நல்ல வேகத்தில் ஆடிக் கொண்டு இருந்தனர்.
இது குறித்து தான் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு மேல் பாக்கி இருந்தும் ஏன் அவசரமாக இப்படி டிக்ளர் செய்ய வேண்டும் என டிவிட்டரிலும், யூட்டியூப் சேனலில் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, ” கே.எல்.ராகுலை பிசிசிஐ முதலில் ஓப்பனராக ஆடச் சொன்னது. பின்னர் மிடில் ஆர்டருக்குத் தள்ளியது. இப்போது அதற்கும் கீழ் ஆட வைக்கிறது. அப்படி இருந்த போதிலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைக்கின்ற போது கூட அதைத் தடுப்பது எவ்வகையில் நியாயம் ? “
” இந்திய அணி நினைத்து இருந்தால் வங்கதேச அணியை ஃபாலோ ஆன் ஆட சொல்லி இருக்கலாம். ஆனால் பேட்டிங் ஆட வேண்டுமென்ற நோக்கில் தான் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. அப்படி இருக்கையில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் விளையாடிய பின்பு உடனே டிக்ளர் செய்கிறார்கள் என்றால் எதற்கு 6வது பேட்ஸ்மேன் ? ” என சரமாரியாக கேள்விகள் எழுப்பினார் கே.எல்.ராகுல்.
” கே.எல்.ராகுலை எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. முதல் இன்னிங்சில் அவர் சரியாக செய்யவில்லை தான், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் அடித்து 22 (19)* என நல்ல வேகத்தில் காணப்பட்டார். அவரை தொடர்ந்து ஆடச் சொல்லி அரை சதம் கடந்த பின்னர் டிக்ளர் செய்து இருக்கலாம். இப்போது கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் அழுத்தத்தோடு தென்படுவார். இதற்கு காரணம் கம்பீர் & கோ தான். ” என ஒப்பனாகவே ஆகாஷ் சோப்ரா கடுமையான விமர்சனத்தைத் தெரிவித்தார்.

