நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்த போதிலும் இரண்டாவது இன்னிங்சில் இந்திய டாப் ஆர்டர் தரமான பேட்டிங் பெர்பாமன்ஸை வெளிக்காட்டினர். அதில் அற்புதமாக ஆடி சதம் விளாசிய சர்பராஸ் கான் குறித்தும் ரோஹித் ஷர்மா அவரை எவ்வாறு நடுத்துவார் என்பது குறித்தும் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் சேர்த்தது 356 ரன்கள் முன்னிலைப் பெற்றனர். இது இந்திய அணியை பல்வேறு விமர்சனங்களுக்குள் தள்ளியது. என்னதான் மிகப் பெரிய பின்னடைவைப் பெற்றிருந்தாலும் மனம் தளராமல் விளையாடினர்.
இந்தப் போட்டியில் கழுத்து வழி காரணமாக வெளியேறிய கில்லுக்கு பதிலாக அணியில் நுழைந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட இந்தியாவின் ஸ்கோர் மல மலவென உயர்ந்தது. தன் முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்ததோடு 150 ரன்களை எட்டி இந்திய அணியில் ஒரு இடத்தை உறுதி செய்துவிட்டார் என்றே கூறலாம்.
இது குறித்து ஆகாஷ் சோப்ராவும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” சில வருடங்கள் முன்பு சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் ரஹானேவுக்கு பதிலாக வந்த கருன் நாயர் முச்சதம் விளாசி சாதனைப் படைத்தார். சேவாக்குக்குப் பின்னர் இந்திய டெஸ்ட்டில் இவர் மட்டுமே முச்ச்தம் அடித்துள்ளார். ஆனால் அடுத்தப் போட்டியில் ரஹானே திரும்பியதும், கருன் நாயரின் முச்சதத்தைச் சற்றும் மதிக்காமல் அவரை பெஞ்ச்சில் அமர்த்தினர். “
” அதன் பின்னர் கருன் நாயர் டெஸ்ட்டில் இருந்து காணாமலே போனார். இந்த நிலை கில்லுக்கு மாற்றாக வந்த சர்பராஸ் கானுக்கு அமையாது என நினைக்கிறேன். கில் மீண்டும் அணியில் வந்தாலும் சர்பராஸ் கான் தொடர்ந்து ஆடுவார், அதனைத் தான் ரோஹித் ஷர்மா & இந்திய வீரர்கள் குழுவே ஆசைப்படும். கே.எல்.ராகுல் சுத்தமாக ஃபார்மில் இல்லை என்பதால் அவரின் இடத்தில் சர்பராஸ் கான் அடுத்த டெஸ்ட்டில் விளையாடுவார். ” என ஆலோசனை வழங்கியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

