கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு எமகண்டம்.. இந்தத் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்றால் கதை முடிந்தது – ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீரின் பதவியில் தொடர்வாரா அல்ல நீக்கப்படுவாரா என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் & வர்ணையாளர் ஆகாஷ் சோப்ரா தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் டி20ஐ உலகக் கோப்பையை வென்ற பின் இந்திய அணியின் புதிய கோச்சாக கௌதம் கம்பீர் தலைமை ஏற்றார். அவரின் வழி நடத்தலில் இந்திய அணி சிறப்பான ஃபார்மை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் எதிராக அனைத்தும் நடந்துள்ளன.

- Advertisement -

இலங்கையில் ஓடிஐ தொடரை இழந்ததில் துவங்கி, சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்டர் கவாஸ்கர் டிராபியை இழந்தது என பல மோசமான சாதனைகள் கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் பெயருக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது.

- Advertisement -

சீனியர் வீரர்கள் ரோஹித், கோலி இருவரின் மோசமான ஃபார்மும் இதற்க்கு மிகப் பெரிய காரணம். இதனால் அடுத்து நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், சீனியர் வீரர்கள் மற்றும் கோச் இருவருக்கும் மிக முக்கியமானது. கம்பீரின் பதவி இந்தத் தொடர் பின்பு மீண்டும் பரிசீலிக்கப்படுமா என்பதற்கு ஆகாஷ் சோப்ரா தன் பதிலைக் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, ” எனக்கு தெரிந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரை பிசிசிஐ கம்பீரை எந்த ஒரு கேள்வியும் கேட்காது. இங்கிலாந்து தொடருடன் கம்பீர் தலைமை ஏற்று ஒரு வருடம் ஆகிவிடும். ஒருவரைக் கேள்வி கேட்க குறைந்தது ஒரு வருடமாவது தேவை அல்லவா. இந்த ஓர் ஆண்டில் இந்திய அணியில் அடுத்தத் தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வருவதே கம்பீரின் தலையாயக் கடமை. “

- Advertisement -

” இங்கிலாந்து தொடருக்குப் பின்னர் பயிற்சியாளராக கம்பீர் எந்தெத வீரர்களை மேம்படுத்தினார் ? அணியின் நிலை உயர்ந்துள்ளதா ? ஆகியவை ஆராயப்படும். பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு மதிப்பாய்வு நடத்தப்படும் போது பயிற்சியாளர்களுக்கும் அதனைச் செய்வதே தவறு அல்ல. ” என்றார் ஆகாஷ் சோப்ரா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles